TNPSC Thervupettagam

வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் மீதான நிலைக்குழு

August 20 , 2023 337 days 204 0
  • மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமையில் வேதிப் பொருட்கள் மற்றும் உரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப் பட்டுள்ளது.
  • யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் (DAP), முரியேட் பொட்டாசியம் குளோரைடு (MOP), நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK) போன்ற உரங்களுக்காக என்று இறக்குமதியைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அந்தக் குழுவின் அறிக்கைகள் பரிந்துரைத்துள்ளன.
  • இந்த உரங்களின் உற்பத்தியானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 281.83 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆக இருந்த நிலையில், அவற்றின் நுகர்வு வெறும் 401.46 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆக இருந்தது.
  • உரங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியானது 5% ஆகவும், கந்தக அமிலம் மற்றும் அம்மோனியா போன்ற மூலப் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியானது 18% ஆகவும் உள்ளது என்று அக்குழு குறிப்பிட்டுள்ளது.
  • P&K உரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஊட்டமளிப்பு அடிப்படையிலான உர மானியத்தை (NBS) மறு ஆய்வு செய்ய இக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்