TNPSC Thervupettagam
October 9 , 2023 267 days 404 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி G. பாவெண்டி, லூயிஸ் E. புரூஸ் மற்றும் அலெக்ஸி I. எகிமோவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்து தொகுத்த இவர்களின் தொகுப்புக்காக என்று அவர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், வண்ணப்பூச்சு பூசப்பட்ட கண்ணாடியில் அளவு சார்ந்த குவாண்டம் விளைவுகளை உருவாக்குவதில் டாக்டர் எகிமோவ் வெற்றி பெற்றார்.
  • 1983 ஆம் ஆண்டில், டாக்டர் புரூஸ் மற்றும் அவரது சகாக்கள் ஒரு படி மேலே சென்று, கண்ணாடிக்குப் பதிலாக, திரவக் கரைசலில் அது போன்ற படிகங்களைத் உருவாக்கினர்.
  • இறுதியாக, 1993 ஆம் ஆண்டில், டாக்டர் பாவேண்டி மற்றும் அவரது சக பணியாளர்கள் இந்த தனித்துவமான அதாவது, குவாண்டம் புள்ளிகள் - நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகள் மற்றும் உயர் ஒளியியல் தரத்துடன் கூடிய படிகங்களை உருவாக்குவதற்காக ஒரு நுட்பத்தை உருவாக்கினர்.
  • இந்த நுண் துகள்கள் மின்னணுவியல், மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் குவாண்டம் கணினி முறை போன்ற துறைகளில் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
  • குவாண்டம் புள்ளிகள் சில நானோமீட்டர்கள் அகலம் கொண்ட துகள்கள் ஆகும்.
  • அவற்றின் சிறிய அளவு காரணமாக அவை தனித்துவமான ஒளியியல் பண்புகளை கொண்டுள்ளன.
  • அவற்றின் அமைப்பு மற்றும் அணுக் கட்டமைப்பு பெரிய அளவிலான பொருட்களைப் போலவே இருக்கும், ஆனால் பெரிய அளவிலான பொருட்களின் பண்புகள் அவற்றின் அளவைப் பொறுத்தது அல்ல.
  • குவாண்டம் புள்ளிகள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கலன்களில் ஆற்றல் உட்கிரகிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக வேண்டி ஒளிமின்னழுத்த கலன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்