TNPSC Thervupettagam
October 11 , 2020 1385 days 560 0
  • பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சர்பென்டையர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோட்னா ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான  வேதியிலுக்கான நோபல் பரிசானது வழங்கப் படுகின்றது.
  • இவர்கள் சிஆர்ஐஎஸ்பிஆர் எனப்படும் மரபணு மாற்றம் குறித்த ஒரு முறையின் வளர்ச்சிக்காக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
  • சிஆர்ஐஎஸ்பிஆர் என்பது முறையாகத் தொகுக்கப்பட்ட இடைவெளி கொண்ட மீண்டும் ஏற்படும் சிறு பாலின்ட்ரோம் (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats - CRISPR)  என்பதைக் குறிக்கின்றது. இது 2012 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இது மரபணு மாற்றத்தை மிகவும் எளிய முறையில் மாற்றுவதையும் அதே வேளையில் மிகவும் திறனுள்ளதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதனை விரும்பத்தகாத மரபணு மாற்றத்தின் மூலம் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வாகப் பயன்படுத்த முடியும்.
  • வரலாற்றில் முதன்முறையாக வேதியியல் நோபல் பரிசானது பெண்கள் இருவருக்கு இணைந்து வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்