TNPSC Thervupettagam

வேம்பூர் செம்மறி ஆடுகளின் நிலை

April 13 , 2025 6 days 57 0
  • தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வேம்பூர் செம்மறி ஆடுகளை ('பொட்டு ஆடு') வாழ்விடமாகக் கொண்டுள்ளன.
  • ஆங்காங்கே காணப்படுகின்ற செம்பழுப்பு நிறத் திட்டுகள் கொண்ட வெள்ளை நிற ரோமங்களையும், சிலவற்றில் ஒரு அரிதாக கருப்புத் திட்டுகளையும் கொண்ட அதன் தனித்துவமான ரோமத்திலிருந்து இந்த பெயர் பெறப்பட்டது.
  • இந்தத் தனித்துவமான அடையாளங்கள் அவற்றை இந்தியாவில் உள்ள மற்ற செம்மறி இனங்களிலிருந்து வேறுபடுத்துகின்றன.
  • இந்த வேம்பூர் செம்மறி ஆடுகள் ஆனது மெட்ராஸ் ரெட், மச்சேரி, செவ்வாடு மற்றும் கிலகரசல் ஆகியவற்றுடன் கூடிய தமிழ்நாட்டின் ஐந்து பூர்வீக ரோமம் கொண்ட செம்மறி ஆடு இனங்களில் ஒன்றாகும்.
  • அதன் நடுத்தர அளவிலான தொங்கும் காதுகள், குறுகிய மெல்லிய வால்கள் மற்றும் உயரமான மெலிந்த உடல்கள் அவற்றை எளிதில் அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகின்றன.
  • இந்த இனத்தின் மிகவும் இயற்கையான தகவமைப்பு மற்றும் வறண்ட பருவநிலைக்கு ஏற்றவாறு தகவமைதல் ஆகியவை மழைக்கால வேளாண் பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
  • இதன் தனித்துவத்தை அங்கீகரித்து, தேசிய விலங்கு மரபணு வள வாரியமானது 2007 ஆம் ஆண்டில் இந்த இனத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்