TNPSC Thervupettagam

வேர்ப் பாலங்கள்

January 12 , 2023 556 days 317 0
  • விவசாயி ஒருவர், சிரபுஞ்சியில் உள்ள உம்கார் ஆற்றின் குறுக்கே, இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையிலான வேர்ப் பாலங்களைக் கட்டமைக்கச் செய்வதற்காக அந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய நடைமுறையைப் பின்பற்றி அந்தப் பாலங்களைக் கட்டமைக்கும் பணியினை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறார்.
  • மேகாலயாவின் சீரற்ற கிழக்கு காசி மலைகளில் உள்ள சோஹ்ரா என்றும் அழைக்கப் படும் சிரபுஞ்சிக்கு அருகிலுள்ள சீஜ் கிராமத்தின் வழியே பாயும் உம்கார் ஆற்றின் மீது அவர் உருவாக்கிய இந்தக் கட்டமைப்பு ஒரு அதிசயமாக உருவடுத்துள்ளது.
  • இதற்கான பாரம்பரிய நடைமுறையைப் போலவே, அவர் இரப்பர் மரத்தின் (ஃபிக்கஸ் எலாஸ்டிகா) வேர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
  • உம்கார் ஆற்றின் குறுக்கே கட்டமைக்கப்பட்டுள்ள வேர்ப் பாலம் ஆனது, இரண்டு அடுக்குகளாக வளர்ந்து, முறையே 20 மீட்டர் மற்றும் 15 மீட்டர் வரை நீண்டு காணப் படுகிறது.
  • மேகாலயா அதன் வேர்ப் பாலங்களுக்கு புகழ் பெற்றதோடு, உள்மாநிலத்தில் இவை ஜிங்கிங் ஜ்ரி என்று அழைக்கப்படுகின்றன.
  • இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • இந்த மாநிலம் முழுவதும் காணப்படும் பல பாலங்கள் ஒரு நூற்றாண்டு கால அளவில் பழமையானவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்