TNPSC Thervupettagam

வேறுபட்ட நேர அடிப்படையிலான மின்சாரக் கட்டணங்கள்

July 7 , 2023 382 days 228 0
  • அரசானது, 2020 ஆம் ஆண்டு மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகளில் இரண்டு மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
  • இது ஒரு நாளில் பல்வேறு மின்சாரப் பயன்பாட்டு வீதங்களைக் கொண்டு கணக்கிடப் படும் முறை (ToD) மற்றும் திறன்மிகு மீட்டர்களின் ஒழுங்குமுறைப்படுத்தச் செய்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது வழக்கமான கட்டணத்தை விட குறைந்தது 20 சதவீதம் குறைவாக இருக்கும் .
  • அதே சமயம், வணிகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர்களுக்கு விதிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த பட்சம் 20 சதவிகிதம் அதிகமாகவும், மற்ற நுகர்வோருக்கு விதிக்கப் பட்டக் கட்டணத்தை விட குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அதிகமாகவும் இருக்கும்.
  • பகல் நேரத்தில், மின் கட்டணமானது 20% வரை குறையக் கூடும், இதனால் நுகர்வோர் பயனடைவார்.
  • இது மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உச்சநிலை மின் தேவையைச் சமன்படுத்த உதவும்.
  • இது நுகர்வோர் தங்கள் நுகர்வுகளை ஒழுங்குமுறைப் படுத்தி மேலாண்மை செய்து, நுகர்வோர் தங்கள் கட்டண உயர்வினை கட்டுப்படுத்தச் செய்வதற்குமான திறனை வழங்குகிறது.
  • குறைந்தது 17 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 20 நாடுகள், ஒரு குறிப்பிட்ட வடிவிலான அல்லது மற்றொரு வகையிலான நேர அடிப்படையிலான பல மின்சார கட்டணக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்