TNPSC Thervupettagam

வேற்றுகிரகத்தின் வைட்டமின் மாதிரிகள்

March 30 , 2023 479 days 253 0
  • ஹயபுசா2 விண்கலமானது ரைகு என்ற ஒரு குறுங்கோளில் இருந்து சுமார் ஒன்றரை வருடங்களாகப் பாறை மாதிரிகளைச் சேகரித்தது.
  • இந்த மாதிரிகளில் வாழ்க்கைக்கு அவசியமான கரிமச் சேர்மங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.
  • கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சேர்மங்களில் வைட்டமின் பி 3 என்றும் அழைக்கப் படுகின்ற நியாசின் மற்றும் யூரேசில் ஆகியவை காணப்படுகின்றன.
  • RNAவினை உருவாக்கச் செய்கின்ற நான்கு நியூக்ளியோ மூலக்கூறுகளில் (நைட்ரஜன் கொண்டச் சேர்மங்கள்) இதுவும் ஒன்றாகும்.
  • இந்த மூலக்கூறுகளில் உயிரினங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான வழி முறைகள் உள்ளன.
  • ஹயபுசா2 விண்கலமானது, ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA மூலம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த விண்கலம் அதன் இலக்கான ரியுகு குறுங் கோளினை அடைந்து, ஒன்றரை வருடங்கள் அங்கு தங்கி மாதிரிகளைச் சேகரித்து, 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூமிக்குத் திரும்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்