வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய வளாகத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
பொது விமானப் போக்குவரத்தின் தலைமை இயக்குநரகத்தின் பாதுகாப்புத் தணிக்கை முடிந்த பிறகு நவம்பர் மாதத்திற்குள் இது தனது செயல்பாடுகளைத் தொடங்கும்.
வேலூரில் உள்ள புதிய ஓடுபாதையில் நவம்பர் மாதம் முதல் சிறிய விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
வேலூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, UDAN – பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (UDAN-RCS) இரண்டாம் கட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.
UDAN திட்டமானது, சிறிய நகரங்களில் விமானச் சேவை இணைப்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய விமான நிலையமானது ஆம்பூர், ஆற்காடு, வாணியம்பாடி, வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள உள்ளூர் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.