இப்போது முடிவடைந்த நிதியாண்டில் (2020-21) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலத்தில் உருவாக்கப்பட்ட தனிநபர் பணி நாட்கள் 30 கோடியைத் தாண்டி உள்ளது.
இது 33.4 கோடி தனிநபர் பணி நாட்களைக் கொண்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில், மாநிலத்திற்கு 27 கோடி தனிநபர் பணி நாட்கள் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது.
பின்னர், அது அந்த இலக்கை 32 கோடி தனிநபர் பணி நாட்களாகத் திருத்தியது.
கடந்த ஆண்டு தனிநபர் பணி நாட்கள் இலக்கை மிஞ்சிய மாவட்டங்களில் சேலமும் ஒன்றாகும், இது 1.12 கோடி என்ற அங்கீகரிக்கப் பட்ட தனிநபர் பணி நாட்களுக்கு எதிராக சுமார் 1.24 கோடி தனிநபர் பணி நாட்களை உருவாக்கியுள்ளது.
இயற்கை வள மேலாண்மை, நீர்ப் பாதுகாப்பு மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் காஞ்சீபுரத்தின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.