TNPSC Thervupettagam

வேலை நேர விதிமுறைகள் தளர்வு மசோதா

April 25 , 2023 453 days 245 0
  • தமிழ்நாடு சட்டசபையானது, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் ஒரு திருத்தத்தினை நிறைவேற்றியது.
  • அந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தற்போதைய விதிமுறைகளிலிருந்துத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொழிலாளர்கள் தற்போது 12 மணி நேர தினசரி வேலை நேர மாற்றத்தில் வேலை செய்வதற்கான விருப்பத் தேர்வினை தேர்வு செய்யலாம் என்பதோடு, மேலும் அவர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் கூடிய நான்கு நாட்கள் அளவிலான வேலை நாட்களும் வழங்கப்படும்.
  • இந்த மசோதாவானது, வேலை நேர வரம்புகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் ஏதேனும் அல்லது அனைத்து விதிகளிலிருந்தும் எந்தவொருத் தொழிற்சாலை அல்லது குழு அல்லது தொழிற்சாலை குழுவிற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தினை மாநில அரசுக்கு அளிக்கிறது.
  • இதில் சில சட்டப் பிரிவுகள்: 51 (வாராந்திர வேலை நேரம்), 52 (வாராந்திர விடுமுறைகள்), 54 (தினசரி வேலை நேரம்), 55 (ஓய்வெடுப்பதற்கான இடைவெளிகள்), 56 (நேர ஏற்பமைவு) அல்லது 59 (ஒன்றுடன் ஒன்று இணையும் வகையிலான வேலை நேர பரிமாற்றத்திற்குத் தடை).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்