மைக்ரோசாப்ட் மற்றும் லிங்க்ட்இன் ஆகியவை 2024 ஆம் ஆண்டிற்கான வேலைப் போக்கு குறியீட்டு வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகெங்கிலும் மக்களின் வேலை செய்யும் பாங்கு, வழி நடத்தும் திறன் மற்றும் பணியமர்த்தும் பாங்கு ஆகியவற்றில் ஒரு தாக்கத்தினை உண்டாக்குகிறது.
கடந்த ஆறு மாதங்களில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு "கிட்டத்தட்ட இரு மடங்காக" அதிகரித்துள்ளது.
79 சதவீத நிறுவனங்கள் "போட்டித் தன்மை நிறைந்ததாக இருப்பதற்குச் செயற்கை நுண்ணறிவு ஏற்பு மிகவும் முக்கியமானது" என்று ஒப்புக் கொண்டாலும், 59 சதவீத நிறுவனங்கள் "செயற்கை நுண்ணறிவின் உற்பத்தித் திறன் சார்ந்த ஆதாயங்களைக் மதிப்பிடுவது பற்றி கவலை தெரிவித்துள்ளனர்".
இந்த அறிக்கையின்படி, 75 சதவீத மக்கள் தங்களது வேலைகளில் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் அவர்களில் 46 சதவீதம் பேர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
முதலாளிகளின் பார்வையில், 66 சதவீத நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் இல்லாத ஒருவரைப் பணியமர்த்த மாட்டோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.