TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உமிழ்வுக் குறைப்பு

February 23 , 2025 11 hrs 0 min 10 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மாறுதல் மிக்க தொழில்துறைக் குழுக்கள் என்ற முன்னெடுப்பில் 13 புதிய தொழில்துறைக் குழுக்கள் இணைந்துள்ளன.
  • இது 16 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களில் இருந்து இந்த மன்றத்தில் பங்கேற்கும் மொத்தக் குழுக்களின் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்தியது.
  • ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, இந்தியா, நெதர்லாந்து, சவுதி அரேபிய நாடு, சுவீடன், தாய்லாந்து மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தக் குழுக்கள் புதிதாக இந்த மன்றத்தில் இணைந்துள்ளன.
  • இந்த மிகப்பெரும் முன்னெடுப்பானது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நன்கு ஊக்குவிக்கும் அதே வேளையில், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு 2021 ஆம் ஆண்டு COP26 மாநாட்டில் தொடங்கப்பட்டது.
  • 33 குழுக்களும் ஒரு சேர ஆண்டிற்கு 832 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
  • இது சவூதி அரேபியாவின் உமிழ்வுகளுக்குச் சமமானதாகும்.
  • இந்த குழுக்கள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 492 பில்லியன் டாலர் பங்களிப்பைக் கொண்டுள்ளன மற்றும் சுமார் 4.3 மில்லியன் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்