தொலைதொடர்புச் சேவை சார்ந்த புத்தொழில் நிறுவனமான வேல்மென்னி அதன் புதுமையான Li-Fi (ஒளி மெய்நிலை) தொழில்நுட்பத்திற்காக வேண்டி பாதுகாப்பு அமைச்சகத்திடம் (MoD) மானியம் பெற்றுள்ளது.
வேல்மென்னி நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் Li-Fi தொழில்நுட்பம் ஆனது இந்தியக் கடற்படை மற்றும் பிற பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான தரவுப் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.
இது மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வழங்குவதோடு, இந்தியக் கடற்படையின் நிகழ்நேரத் தகவல் தொடர்பு தேவைகளுக்கு வேண்டி மிகவும் பொருத்தமானதாக அமையும்.
Li-Fi நுட்பம் ஆனது சிறப்பு LED (ஒளி-உமிழும் இரு முனையங்கள்) குமிழ் விளக்குகளை திசைவிகளாகப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் ஒளியிழை கம்பிவடமாற்ற தகவல் தொடர்பு (OWC) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
Li-Fi சாதனங்கள் புலப்படும், அகச்சிவப்பு அல்லது புற ஊதா ஒளி மூலம் தரவை வழங்குகின்றன.
அதே சமயம், Wi-Fi வகை திசைவிகள் தரவை அனுப்ப ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகின்றன.
Li-Fi ஆனது வினாடிக்கு 224GB வரையிலான வேகத்தை வழங்கும்.