TNPSC Thervupettagam

வேளாண் உணவு உற்பத்தி முறைகளில் பெண்களின் நிலை

April 28 , 2023 448 days 231 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆனது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டது.
  • இது வேளாண்மையில் நிலவும் பாலின வேறுபாடுகள் மற்றும் உலகப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்து விளக்குகிறது.
  • தற்போது, 345 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் நிர்வகிக்கும் ஒரே அளவிலான வேளாண் நிலங்களின் உற்பத்தித் திறனில் 24% பாலின இடைவெளி உள்ளது.
  • வேளாண்மையில் கூலி வேலையில் ஈடுபடும் ஆண்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலர் மதிப்பில் பெண்கள் 82 சென்ட் சம்பாதிக்கிறார்கள் என்ற நிலையில் இது பாலின ஊதிய இடைவெளியைக் குறிக்கிறது.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில், 66% அளவில் பெண்களின் வேலை வாய்ப்பு வேளாண் உணவு உற்பத்தி முறைகளைச் சார்ந்துள்ள நிலையில், அதே சமயம் தெற்கு ஆசியாவில், இது 71% என்ற அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்