TNPSC Thervupettagam

வேளாண் கொள்கை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு 2024 அறிக்கை

November 20 , 2024 5 days 98 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆனது இந்த முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் கீழ் மதிப்பிடப்பட்ட 54 நாடுகளில் வேளாண் துறைக்கான மொத்த நிதி ஆதரவு 2021-23 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு சராசரியாக 842 பில்லியன் டாலர் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் இருந்த உச்சத்தை விட, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இத்துறைக்கான நிதி வழங்கல்கள் குறைந்துள்ளன.
  • வேளாண் துறைக்கான நிதி ஆதரவில் 12.6% ஆனது புத்தாக்கம், உயிரியல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • 5% நிதி ஆதரவு ஆனது தேவைகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு தன்னார்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை முறையே 37%, 15%, 14% மற்றும் 13% நிதி ஆதரவுடன் சில பெரிய நாடுகளில் வேளாண் துறைக்கான நிதி ஆதரவு அதிகமாக உள்ளது.
  • 2021-23 ஆகிய காலகட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகள் நேர்மறையான நிதி ஆதரவில் ஆண்டிற்கு 628 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்