மத்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று இரண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை 2025-26 ஆம் ஆண்டு வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.
அவை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியனவாகும்.
இது முதன்மையான திட்டங்களை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப பயன்பாட்டு இணைப்பிற்காக தனியாக 824.77 கோடி ரூபாய் நிதியை உருவாக்கியுள்ளது.
இந்த 824.77 கோடி ரூபாயில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தனி நிதியை (FIAT) உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியானது YES-TECH, WINDS என்ற திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீட்டு அமைப்பு (YES-TECH) ஆனது, தொழில்நுட்பம் அடிப்படையிலான மகசூல் மதிப்பீடுகளுக்கு என குறைந்தபட்சம் 30% மதிப்புடன் மகசூல் மதிப்பீட்டிற்காக வேண்டி தொலைநிலை உணர்திறன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
வானிலை தகவல் மற்றும் வலையமைப்புத் தரவு அமைப்புகள் (WINDS) ஆனது தொகுதி அளவில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) மற்றும் பஞ்சாயத்து அளவில் தானியங்கி மழை அளவீட்டு அமைப்புகள் (ARGs) ஆகியவற்றினை அமைக்க திட்டம் இட்டுள்ளது.