TNPSC Thervupettagam

வேளாண் துறைக்கான கொள்கை சார் முன்னெடுப்புகள்

December 17 , 2024 35 days 117 0
  • உற்பத்தியை நன்கு மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் வேளாண் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முன்னெடுப்புகளை மத்திய அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நோயற்ற நடவுப் பொருட்களை வழங்கச் செய்வதன் மூலம் தோட்டக்கலை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக என்று தூய்மையான தாவரத் திட்டத்திற்கு (CPP) ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • எண்ணிம வேளாண்மை திட்டம் ஆனது, எண்ணிமத் தீர்வுகள் மூலம் வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) வழங்கீட்டின் விரிவாக்கம் ஆனது சமூக வேளாண் சொத்துக்கள், ஒருங்கிணைந்தச் செயலாக்க அலகுகள் மற்றும் PM-KUSUM-A ஆகிய திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றினை உள்ளடக்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • தேசிய சமையல் பயன்பாட்டு எண்ணெய்கள் திட்டம் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-Oilseeds) ஆனது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
  • தேசிய இயற்கை வேளாண்மை திட்டம் (NMNF) ஆனது, ஒரு நிலையான மாற்றாக இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிப்பதற்காக வேண்டி அறிமுகப்படுத்தப் பட்டதோடு இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையினை நோக்கியக் குறிப்பிடத் தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்