உற்பத்தியை நன்கு மேம்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் வேளாண் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முன்னெடுப்புகளை மத்திய அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
நோயற்ற நடவுப் பொருட்களை வழங்கச் செய்வதன் மூலம் தோட்டக்கலை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக என்று தூய்மையான தாவரத் திட்டத்திற்கு (CPP) ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
எண்ணிம வேளாண்மை திட்டம் ஆனது, எண்ணிமத் தீர்வுகள் மூலம் வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வேளாண் உள்கட்டமைப்பு நிதி (AIF) வழங்கீட்டின் விரிவாக்கம் ஆனது சமூக வேளாண் சொத்துக்கள், ஒருங்கிணைந்தச் செயலாக்க அலகுகள் மற்றும் PM-KUSUM-A ஆகிய திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றினை உள்ளடக்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய சமையல் பயன்பாட்டு எண்ணெய்கள் திட்டம் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-Oilseeds) ஆனது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
தேசிய இயற்கை வேளாண்மை திட்டம் (NMNF) ஆனது, ஒரு நிலையான மாற்றாக இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிப்பதற்காக வேண்டி அறிமுகப்படுத்தப் பட்டதோடு இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மையினை நோக்கியக் குறிப்பிடத் தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.