TNPSC Thervupettagam

வேளாண் தொழிலாளர் நலன் குறித்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள்

March 18 , 2025 17 days 67 0
  • மத்திய வருமான ஆதரவுத் திட்டத்தின் (PM-Kisan) கீழான சலுகைகள் ஆனது வேளாண் தொழிலாளர்களுக்கும் நன்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரிந்துரைத்தது.
  • நம் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதம் பேர் இந்த வேளாண் துறையில் ஈடுபட்டுள்ளனர் ஆனால் அவர்கள் அனைவரும் நில உரிமையாளர்களாக இல்லை.
  • தற்போது, ​​நில உரிமையாளர் வேளாண் குடும்பங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தலா 6,000 ரூபாய் தொகையினைப் பெறுகின்றன என்பதோடு இது நான்கு மாதங்களுக்கு ஒருமுறையில் 2,000 ரூபாய் என்ற மூன்று சம தவணைகளில் செலுத்தப் படுகின்றது.
  • நம் நாட்டில் சுமார் 14 கோடி நில உரிமையாளராக விவசாயிகள் உள்ளனர், ஆனால் அனைவரும் தங்கள் நிலத்தில் தாங்களாகவே பயிரிடுவதில்லை.
  • 'பரளி' (நெல் எச்சங்கள்) சேகரிப்பதில் ஏற்படும் செலவினத்திற்கு ஒரு இழப்பீடாக இந்த விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு சுமார் 100 ரூபாய் நிதி உதவி வழங்கவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்