TNPSC Thervupettagam

வேளாண் நிலங்களில் சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளைக் கொல்லுதல்

January 13 , 2025 9 days 96 0
  • தமிழ்நாடு மாநில வனத்துறையானது, வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள வேளாண் நிலங்களில் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்தினை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்ட வகையில் கொல்ல அனுமதிக்கும் அரசாணையினை பிறப்பித்துள்ளது.
  • இந்த உத்தரவின் படி, காப்புக் காடுகளை ஒட்டியப் பகுதிகள் மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்படும்.
  • மண்டலம் A வகை பகுதிகளில் (வன எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள்ளான பகுதிகள்) காட்டுப்பன்றிகளை கொள்வதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • மண்டலம் B வகை பகுதிகளில் (ஒன்று முதல் மூன்று கிலோமீ ட்டருக்குள்ளான பகுதிகள்) காட்டுப் பன்றிகளைப் பிடித்து வனப்பகுதிகளில் விட வேண்டும்.
  • மண்டலம் C வகை பகுதிகளில் (மூன்று கிலோமீட்டருக்கு அப்பாலானப் பகுதிகள்), காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற வனத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்