TNPSC Thervupettagam

வேளாண் பட்ஜெட் – தமிழ்நாடு

August 17 , 2021 1103 days 738 0
  • வேளாண்மைக்கான முதலாவது பிரத்தியேகமான பட்ஜெட் (34220 கோடிகள்) 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று  தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • தண்ணீர் வளத்தினை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
  • 1.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் சிறு பாசன வசதிகள் (micro-irrigation structures) அமைக்கப்படும்.
  • 5 வருட காலக்கட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை அரசு செயல்படுத்தும்.
  • இது அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவையும் உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • தமிழகத்தில் கிணற்று நீர்ப் பாசனத்திற்கான அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வேண்டி சூரிய சக்தியினால் இயங்கும் பம்புகளை உபயோகிக்க ஊக்குவிப்பதற்கான ஒரு  திட்டத்தினையும் மாநில அரசு செயல்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்