TNPSC Thervupettagam

வேளாண் பிராந்திய மையம் - மிசோரம்

February 24 , 2018 2466 days 878 0
  • இஸ்ரேல் நாட்டுடனான கூட்டு முயற்சியில், வடகிழக்கு மாநிலங்களின் முதல் வேளாண் பிராந்திய மையம் வரும் மார்ச் 2018-ல் மிசோரத்தில் தொடங்கப்பட உள்ளது.
  • இதுவே இஸ்ரேலுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட முதல் வடகிழக்கு பிராந்திய மையமாகும்.
  • ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பஞ்சாப் உட்பட 22 செயல்பாட்டு மையங்கள் இஸ்ரேலுடனான ஒத்துழைப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • முதல் மையம் 2008-ஆம் ஆண்டு ஹரியானாவில் அமைக்கப்பட்டது
  • இந்த வடகிழக்கு பிராந்திய மையம் சிட்ரஸ் பழங்களை பதப்படுத்துவதற்காக அமைக்கப்பட உள்ளது. இம்மையம் வடகிழக்குப் பகுதிகளின் மொத்த வேளாண் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
  • இம்மையமானது வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய அமைச்சகம், இஸ்ரேல் அரசு மற்றும் மிசோரம் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டிணைவால் ஏற்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்