வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியானது (IFAD - International Fund for Agricultural Development) பல நன்கொடையாளர்களைக் கொண்ட கோவிட்-19 கிராமப்புற ஏழைகளுக்கான ஊக்க வசதியை (Rural Poor Stimulus Facility - RPSF) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற மக்களை கோவிட்-19 நெருக்கடியிலிருந்து மீட்பதைத் துரிதப்படுத்துவதே RPSFஇன் ஒரு இறுதியான குறிக்கோளாகும்.
வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியானது ஒரு சர்வதேச நிதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமாகும். இது வளரும் நாடுகளின் கிராமப்புறங்களில் உள்ள வறுமை மற்றும் பசியை நிவர்த்தி செய்வதை நோக்கிப் பணியாற்றுகின்றது.