குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை நடைமுறைப் படுத்தச் செய்வதற்குப் பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கறவை மாடுகள் வகை சாரா கால்நடைகளை வளர்ப்பதற்கு மானியம் வழங்க இது பரிந்துரைத்துள்ளது.
கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு மத்திய அரசை இக்குழு கேட்டுக் கொண்டது.
ஏற்கனவே 193.46 மில்லியன் கால்நடைகள் மற்றும் 109.85 மில்லியன் எருமை மாடுகள் என்ற அளவிலான தெருக்களில் ஆதரவற்று விடப்பட்ட கால்நடைகளின் மிகப்பெரும் எண்ணிக்கையானது மேலும் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் இக்குழு கூறி உள்ளது.
பயிர் எச்சம் அல்லது தாளடிகளை எரிப்பதைத் தடுப்பதற்காக விவசாயிகள் அவற்றை முறையாக நிர்வகிப்பதற்கும் அகற்றுவதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
PM-KISAN சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பண உதவியை ஆண்டிற்கு 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக அதிகரிக்க குழு முன்மொழிந்துள்ளது.
விவசாயிகளின் துயரம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இது கோரியுள்ளது.
2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்குக் கட்டாயப் பொதுப் பயிர்க் காப்பீட்டை அறிமுகப்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.