மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொது சேவை மையங்களோடு கூட்டு சேர்ந்து கிராமங்களில் 5000 வை-பை மையங்களை ஆரம்பித்துள்ளது.
புதுதில்லியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலும் இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த வை-பை மையங்களின் நோக்கம் பாரத் நெட் திட்டத்தின் மூலமாக கிராமப்புற இணையத்திற்கான இணைப்பு வசதியை உருமாற்றுவது ஆகும்.