மகாராஷ்டிர மாநில அமைச்சரவை ஆனது சமீபத்தில் நல்கங்கா-வைங்கங்கா நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது நாட்டிலேயே மிகப் பெரிய நதிநீர் இணைப்புத் திட்டமாக குறிக்கப்படுகிறது.
இது பண்டாராவில் வைங்கங்கா ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள கோசிகுர்த் அணையில் இருந்து தண்ணீரை ஏற்றும் திட்டம் ஆகும்.
பின்னர், 427 கிலோமீட்டர் நீளமுள்ள சில கால்வாய்கள், குழாய்கள் மற்றும் நீரேற்றுப் பாசனத் திட்டம் ஆகியவை மூலம் புல்தானாவில் உள்ள நல்கங்கா நதியில் அதைச் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.