வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆனது, இரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கான வைர முன்பண உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையில் வெட்டப்பட்ட மற்றும் நன்கு மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கு இறக்குமதி வரி விலக்கினை அளிக்கிறது.
இரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதியாளர்கள் இந்த உரிமத்தை வெகு காலமாக கோரி வந்தனர்.
இந்த உரிமம் ஆனது தகுதியான ஏற்றுமதியாளர்கள், பகுதியளவு செயல்முறைக்கு உட்படுத்தப் பட்ட, பகுதியளவு வெட்டப்பட்ட மற்றும் சில உடைந்த வைரங்கள் உட்பட வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களை இறக்குமதி செய்ய அதனை அனுமதிக்கிறது.
ஏற்றுமதியாளர்கள் 10 சதவீத மதிப்புக் கூட்ட வேண்டிய நிபந்தனையுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் தாங்கள் ஈட்டிய சராசரி வருவாயில் 5 சதவீதம் வரையிலான மதிப்பிலான வைரங்களை இறக்குமதி செய்யலாம்.