TNPSC Thervupettagam

வோரோனேஜ் ரேடார்

December 17 , 2024 34 days 107 0
  • இந்தியாவின் வான் வெளிப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முக்கிய விவாதங்களில் (முடிவு நிலையினை எட்டிய) ஈடுபட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது அதிநவீன வோரோனேஜ் ரேடார் அமைப்பை வாங்குவதில் கவனம் செலுத்துகிறது.
  • இது ஒரு பரந்தப் பிராந்தியத்தில் வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறனை மேம்படுத்தும்.
  • இது 8,000 கிலோமீட்டருக்கும் அதிகமானச் செங்குத்து செயல்பாட்டு வரம்பையும், 6,000 கிலோமீட்டருக்கு மேலான கிடைமட்டச் செயல்பாட்டு வரம்பையும் கொண்டுள்ளது.
  • உந்து விசை எறிகணைகள், ரேடாருக்குப் புலப்படாத வகையிலான விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs) உள்ளிட்ட பல அச்சுறுத்தல்களை இந்த ரேடார் கண்டறிந்து கண்காணிக்க முடியும்.
  • ரஷ்யாவின் கூற்றுகளின்படி, இந்த அமைப்பு ஆனது 500க்கும் மேற்பட்ட பொருட்களை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும் மற்றும் விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் நெருங்கும் பொருட்களைக் கூட கண்காணிக்க முடியும்.
  • இந்த ரேடார் அமைப்பில் குறைந்தபட்சம் 60% ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறித்த ஒப்பந்தங்களும் இந்த ஒரு ஒப்பந்தத்தில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்