TNPSC Thervupettagam

வோல்பேசியா பாக்டீரியா

July 19 , 2024 128 days 184 0
  • நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மார்ஷல் ஹெர்டிக் மற்றும் சிமியோன் பர்ட் வோல்பாக் என்ற இரண்டு அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கொசுக்கள் தங்கள் உயிரணுக்களுக்குள் பாக்டீரியாவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
  • இதர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பின்னர் பெரும்பாலான பூச்சிகள் மற்றும் பல கணுக்காலிகளின் செல்களில் இதே போன்ற பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்தனர்.
  • இந்தப் பாக்டீரியாவினை உள்ளடக்கிய இனத்திற்கு வோல்பேசியா என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • வோல்பேசியா பாக்டீரியா பூச்சிகளின் கருமுட்டைகளிலும் உள்ளது ஆனால் அவை அதன் விந்தணுவில் காணப்படுவதில்லை.
  • அதாவது பெண் பூச்சிகளால் வோல்பேசியாவை அவற்றின் சந்ததியினருக்கு நன்குப் பரிமாற்ற முடியும், ஆனால் ஆண் பூச்சிகளால் அவ்வாறு பரிமாற்ற முடியாது.
  • என்கார்சியா ஃபார்மோசா குளவிகள், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒரு திறன் மிகு வழியை வழங்கச் செய்கின்றன என்பதால் அவை வேளாண் அறிவியலாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்