பீரங்கித் தொழிற்சாலை வாரியமானது (OFB - Ordnance Factory Board) ஷரங் என்ற பீரங்கித் துப்பாக்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.
OFB என்பது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உபகரண உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில்துறை அமைப்பாகும்.
பீரங்கித் துப்பாக்கிகள் தற்போது கான்பூர் பீரங்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப் படுகின்றன.
ஷரங் என்பது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட 155 மிமீ உள்விட்டம் கொண்ட பீரங்கித் துப்பாக்கியாகும்.
இந்த துப்பாக்கி அமைப்பின் தாக்குதல் நடத்தும் வரம்பானது 12 கி.மீலிருந்து 39 கி.மீ ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.