வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் அசன் (Shakib Al Hasan) அரிய இரட்டைச் சாதனைகளான 10,000 ரன்களை எடுத்துள்ள, 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சர்வதேச கிரிக்கெட் வரலாற்றின் மூன்றாவது ஆல்ரவுண்டராக உருவாகியுள்ளார்.
இதற்கு முன் இச்சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜாகஸ் காலிசும் (Jacques kallis), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியும் (Shahid Afridi) புரிந்துள்ளனர்.
டெஹ்ராடூனில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானிற்கு எதிரான 3-வது சர்வதேச T20 போட்டியில் இந்த மைல்கல்லை 31 வயதான ஷாகிப் எட்டியுள்ளார்.