வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது இந்தியாவின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகங்களின் ஷாங்காய் கல்வித் தரவரிசையில் (ARWU) இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் இது முதலிடத்தைப் பெற்று உள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் உலகப் பல்கலைக்கழகங்களில் 501 முதல் 600வது இடத்தில் உள்ளது.
உலகின் மிகவும் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவின் 15 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்விக் கழகம் ஆனது, உலகளவில் 401 முதல் 500 வரையிலான தரவரிசையில் பட்டியலிடப் பட்டுள்ளன என்ற நிலையில் இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.