TNPSC Thervupettagam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, 2018

February 16 , 2018 2473 days 2408 0
  • நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் கிழக்கு ஷான்டோங் மாகாணமான குயிங்டோவோ-வில்(Qingdao) 2018ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization -SCO) மாநாட்டை சீனா நடத்த உள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2018ஆம் ஆண்டிற்கான சுழற்சி வழியிலான தலைமையை (rotating chair) சீனா ஏற்றுள்ளது.
  • இதற்குமுன் 17வது ஷாங்காய் சர்வதேச அமைப்பின் மாநாடு 2017ல் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் (Astana) நடத்தப்பட்டது.

அமைப்பைப் பற்றி

  • சீனாவின் பெய்ஜிங்-ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது யூரேஸியப் பிராந்தியத்தின் (Eurasian) ஓர் அரசியல் பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாகும்.
  • 2001 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
  • இதன் முழு நேர உறுப்பினர்களாவன
    • சீனா
    • இரஷ்யா
    • கஜகஸ்தான்
    • உஸ்பெகிஸ்தான்
    • தஜிகிஸ்தான்
    • கிர்கிஸ்தான்
    • இந்தியா
    • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவை நடப்பில் இந்த அமைப்பின் கூர்நோக்கு நாடுகளாக (Observer) உள்ளன.
  • கூர்நோக்கு நாடுகளாக இருந்து வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற SCO மாநாட்டில் முழு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.
  • ஷாங்காய் ஐந்து (Shanghai Five) எனும் பெயரில் 1996 ஆம் ஆண்டு இரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை கொண்டு சீனா-வால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அஸ்தானா பிரகடனத்தின் மூலம் (Astana Declaration) மூலம் SCO ஓர் பிராந்தியப் பாதுகாப்பு (Regional Security Organization) அமைப்பாக உருவானது.
  • உறுப்பு நாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதே (military cooperation) இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்