TNPSC Thervupettagam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையேயான உச்சி மாநாடு 2020

December 3 , 2020 1372 days 584 0
  • இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மன்றத்தின் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையேயான உச்சி மாநாட்டின் (Shanghai Cooperation Organization Council of Heads of Government summit) 19வது கூட்டமாகும்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களின் மன்றமானது தனது உறுப்பு நாடுகளின் பிரதமர்களைக் கொண்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மன்றத்தின் அரசாங்கத் தலைவர்களின் மாநாடானது 7 பிரதமர்களின் பங்களிப்பைக் கண்டது.
  • இதில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆறு உறுப்பு நாடுகளும், பார்வையாளர் நாடான பெலாரஸும் அடங்கும்.
  • இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பங்கேற்கவில்லை.
  • இந்த இணைய வழி மாநாட்டிற்கு இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு அவர்கள் தலைமை தாங்கினார்.
  • இந்தியா, அதன் சிறப்பு தலைமை உரிமைகளைக் கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க துர்க்மெனிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு நேர உறுப்பினரான பிறகு, இந்தியாவானது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு மட்டத்திலான முதல் கூட்டத்தை நடத்துகிறது.
  • சுழற்சியின் படி, உஸ்பெகிஸ்தானுக்கு அடுத்த படியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அரசாங்கத் தலைவர்களின் மன்றத்தின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது.
  • இந்தியாவின் ஓராண்டு கால அளவிலான பதவிக் காலமானது நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும்.
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் “அரசத் தலைவர்கள்” கூட்டத்தில் மோடி அவர்கள் ஏற்கனவே கலந்து கொண்டார்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது மொத்தம் 8 உறுப்பு நாடுகளையும் 4 பார்வையாளர் நாடுகளையும் கொண்டுள்ளது.
  • ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகியவை அதன் இதர பார்வையாளர் நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்