TNPSC Thervupettagam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஈரான்

July 10 , 2023 505 days 288 0
  • இந்தியா நடத்திய காணொளி வாயிலான உச்சி மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) புதிய ஒரு நிரந்தர உறுப்பினராக ஈரான் அங்கீகரிக்கப் பட்டது.
  • பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்ற 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நாடு இந்த உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற்றது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
  • ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை தொடக்கக் கால உறுப்பினர்கள் ஆகும்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை 2017 ஆம் ஆண்டில் அதன் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தினைப் பெற்றன.
  • மார்ச் மாதத்தில், சவூதி அரேபியா நாட்டின் அமைச்சரவையானது இந்த அமைப்பில் இணைவதற்கான முடிவிற்கு தனது ஒப்புதலை அளித்தது.
  • கடந்த மே மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பேச்சுவார்த்தைப் பங்குதாரர் நாடுகளாக மாறின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்