TNPSC Thervupettagam

ஷாச்சி மற்றும் சுருதி கப்பல்கள் அறிமுகம்

July 26 , 2017 2549 days 969 0
  • ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் லிமிடெட் (RDEL) நிறுவனமானது குஜராத்தில் உள்ள பிப்பாவ் துறைமுகத்தில் முதல் இரண்டு கடற்படை ரோந்து கப்பல்களை (NOPVs) ஷாச்சி மற்றும் சுருதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த இரண்டு NOPVக்கள் இந்தியாவில் தனியார் துறை கப்பல் சேவையால் தொடங்கப்படும் முதல் போர்க்கப்பல்கள் ஆகும்.
  • இந்த கப்பல்கள், P-21 திட்டத்தின் கீழ் இந்தியக் கடற்படைக்கு ஐந்து கப்பல்களை கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • ரிலையன்ஸ் உள்கட்டமைப்பின் துணை நிறுவனமான RDEL ஆனது, இந்தியாவில் தனியார் உற்பத்தி உரிமையாளராக உள்ளது. இது 2011ல் பாதுகாப்புப்படை கப்பல்களுக்கான பாதுகாப்புத்துறை உற்பத்திக்கு அனுமதி பெறும் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியக் கடலோரப் பாதுகாப்புக்காக ஒரு பயிற்சி கப்பல் மற்றும் 14 வேகமாக செல்லக்கூடிய ரோந்துப்படகுகள் (FPVs) ஆகியவற்றின் கட்டுமானத்திலும் ஈடுபட்டுள்ளது.
  • இதற்கு முன் ஆர்டிஎல் நிறுவனம் ONGCக்காக கடற்கரை உதவிக் கப்பல்கள் மற்றும் நார்வே நிறுவனத்திற்காக பனிப்பொழிவு தாங்கிகள் மற்றும் NPCC-UAEக்காக கடல் துறைமுகச் சரக்குக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கான கப்பல்களை கட்டியுள்ளது.
  • இது சர்வதேச வாடிக்கையாளர்களுக்காகபழுது மற்றும் மறுசீரமைப்பு, வணிக மற்றும் பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் நகர்ந்து செல்லக்கூடிய எண்ணெய் தோண்டும் தளங்கள் ஆகிய பணிகளில் உதவுகிறது.
  • கடற்படை ரோந்து கப்பல்கள் (NOPVs)
  • NOPVக்கள் நாட்டின் பரந்த கடல் பொருளாதார மண்டலத்தை (EEZ) கண்காணித்து வரும் முக்கியமான ரோந்து கப்பல்கள்.
  • கடற்படை ரோந்துகள், கடலோர சொத்துக்களைப் பாதுகாத்தல், கடற்படை ஆதரவு நடவடிக்கைகள், கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள்மற்றும் கப்பல்பாதைகள் பாதுகாப்பு போன்ற செயல்பாட்டு பணிகளையும் மேற்கொள்கின்றன.
  • ஆர்டிஇஎல் (RDEL) மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து NOPVகள் 76 மிமீ சூப்பர் ரேபிட் கன் மவுண்ட் (SRGM) அமைப்போடு நடுத்தர எல்லை மற்றும் குறுகிய தூர தாக்குதல் மற்றும் தற்காப்பு திறன்களை மேம்படுத்தும் இரண்டு 30 மிமீ AK- 630 துப்பாக்கிகளோடுபலப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் கப்பல்களின் ஆயுதங்கள் தொலைதூர மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • இவை 20,000 கிலோவாட் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இதனால் 25 கடல் மைல்கள் வரை வேகத்தை வழங்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்