TNPSC Thervupettagam

ஷாச்சி மற்றும் ஸ்ருதி கடல் ரோந்துக் கப்பல்கள்

July 27 , 2017 2725 days 1024 0
  • ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல்நிறுவனம் (Reliance Defence and Engineering Limited , RDEL/ ஆர்.டி.ஈ.எல்) ஷாச்சி மற்றும் ஸ்ருதி என்ற இரண்டு கடல் ரோந்துக் கப்பல்களை கடற்படைக்காக அறிமுகம் செய்தது (Naval Offshore Patrol Vessels, NOPVs). இந்தக் கப்பல்கள் குஜராத் மாநிலம் பிபவவ் என்ற இடத்தில் உள்ள கப்பல் கட்டும் துறையில் கட்டப்படுகிறது.
  • இவை இந்தியாவில் , தனியார் கப்பல்கட்டுந் துறையால் உருவாக்கப்படும் முதல் போர்க்கப்பல்கள் ஆகும். இந்த இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படையின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஐந்து கப்பல்களின் ஒரு பகுதியாகும். திட்டத்தின் கீழ் கட்டப்படும் கப்பல்களின் மொத்த மதிப்பு சுமார் 2500 கோடி ருபாய் ஆகும் .
  • NOPV கப்பல்களின் முக்கிய பணி - இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone, EEZ) ரோந்து பணியில் ஈடுபடுவது ஆகும். மேலும்கடற்படைரோந்துகள், கடற்படையின் மீட்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் , கடலோர பாதுகாப்புப் பணிகள் , கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பாதுகாப்பு, கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கை போன்றவற்றிலும் இந்த நவீன ரக கப்பல்கள் ஈடுபடுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்