TNPSC Thervupettagam

ஷாஹீத் உதம் சிங்கின் 120வது பிறந்த தினம்

December 27 , 2019 1675 days 779 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று அனுசரிக்கப்பட்ட சிறந்த புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஷாஹீத் உதம் சிங்கின் 120வது பிறந்த தினத்தின் போது இந்தியா அவருக்கு மரியாதை செலுத்தியது.
  • இவர் 1899 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் பிறந்தார்.
  • இவர் காதர் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
  • 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பைசாகி திருவிழாவின் (அறுவடைத் திருவிழா) போது அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் நகரில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
  • ஜெனரல் டயர் என்பவர் நிராயுதபாணியான இந்தக் கூட்டத்தின் மீது எந்தவித  முன் எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
  • இந்தக் கொடூரமான படுகொலையில் பலர் உயிர் இழந்தனர்.
  • இவர் 1940 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் மைக்கேல் ஓ டயரை படுகொலை செய்ததன் மூலம் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பழிவாங்கியதற்காக மிகவும் சிறப்பாக அறியப் படுகின்றார். அதற்காக இவர் லண்டனில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்