TNPSC Thervupettagam

ஷி ஜின்பிங்கிற்கும் மோடிக்கும் இடையிலான இரண்டாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பு

October 15 , 2019 1924 days 753 0
  • ஷி ஜின்பிங்கிற்கும் மோடிக்கும் இடையிலான இரண்டாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பானது மாமல்லபுரத்தில் நடத்தப் பட்டது.

  • இந்தச் சந்திப்பின் போது விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு (Regional Comprehensive Economic Partnership - RCEP) குறித்து இந்தியா தனது கவலைகளைக் கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளரான விஜய் கோகலே கூறினார்.
  • RCEP என்பது சீனா தலைமையில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் 53 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகப் பற்றாக்குறை குறித்தும் இங்கு  விவாதிக்கப் பட்டது.
  • சீன துணைப் பிரதமரான ஹு சுன்ஹுவா மற்றும் இந்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையே இது குறித்து விவாதிப்பதற்கு வழிமுறை ஒன்று நிறுவப் பட்டுள்ளது.
  • இந்த சென்னைச் சந்திப்பை இரு நாடுகளுக்கும் இடையிலான “ஒத்துழைப்பின் புதிய சகாப்தம்” என்று மோடி பாராட்டியுள்ளார்.
  • இரு தலைவர்களுக்கிடையில் இது போன்ற ஒரு முதலாவது அதிகாரப் பூர்வமற்ற சந்திப்பானது 2018 ஆம் ஆண்டில் சீனாவின் வுஹானில் நடத்தப் பட்டது.
நேபாளத்தில்
  • சென்னைச்  சந்திப்பைத் தொடர்ந்து, ஷி ஜின்பிங் அடுத்ததாக நேபாளத்திற்கும் பயணம் செய்தார். 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன அதிபர் ஒருவர் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • சீனாவின் லாசா மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய நகரங்களுக்கு இடையே ரயில் இணைப்பு ஒன்று முன்மொழியப் பட்டுள்ளது.
  • டிரான்ஸ்-இமயமலை இணைப்பானது புத்தரின் பிறப்பிடமான லும்பினியுடனும்  இணைக்கப்பட இருக்கின்றது.
  • எவரெஸ்ட் சிகரத்தின் மீண்டும் அளவிடப்பட்ட உயரத்தை அறிவிக்க நேபாளமும் சீனாவும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்