TNPSC Thervupettagam

ஷிகெல்லா பாக்டீரியா

May 9 , 2022 839 days 511 0
  • நச்சு உடைய உணவை உண்டதனால் சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து கேரளாவின் காசர்கோட்டிலுள்ள செருவத்தூர் எனுமிடத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
  • மேற்கொள்ளப்பட்ட அந்த சோதனையில் சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா என்ற பாக்டீரியாக்கள் அந்த உணவில் இருந்தது தெரிய வந்தது.
  • ஷிகெல்லா என்பது மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தாத வகையில் குடலில் வசிக்கும் பாக்டீரியாக்களின் குழுவான என்டோரோபாக்டர் என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாக்டீரியாவாகும்.
  • மனிதர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் நான்கு வகையான ஷிகெல்லா பாக்டீரியாக்கள் உள்ளன - அவை  ஷிகெல்லா சோனி, ஷிகெல்லா ஃப்ளெக்ஸ்னெரி, ஷிகெல்லா பாய்டி மற்றும் ஷிகெல்லா டிசென்டீரியா ஆகியனவாகும்.
  • நான்காவது வகை பாக்டீரியமானது, அது உருவாக்கும் நச்சுப்பொருளின் காரணமாக மிகக் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்