ஷிக்மோத்சவ் திருவிழா பெரும் உற்சாகத்துடன் கோவாவில் நடத்தப்பட்டது. இந்த கடலோர மாநிலத்தின் பல்வேறு கலாச்சார திருவிழாக்களில் ஷிக்மோத்சவ் அல்லது ஷிக்மோ (Shigmotsav (or) Shigmo) திருவிழாவும் ஒன்றாகும்.
வண்ணங்கள், இசை, நடனம், அணிவகுப்பு, ஆடைகள் போன்றவை கொண்டு இத்திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றது.
ஹிக்மோ திருவிழாவின் அணிவகுப்பானது கோவன்களின் (கோவா மக்கள் – Goan) வாழ்க்கையை நாட்டுப்புற நடனங்கள் (Folk dance) மற்றும் உள்ளூர் மக்களின் இசை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தும்.