கிளாக்ஸோஸ்மித்க்ளைன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (GSK) நிறுவனமானது தனது அக்கி அம்மை (ஷிங்கிள்ஸ்) தடுப்பு மருந்தினை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஷிங்ரிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பு மருந்தானது இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளில் ஒன்றாகும்.
ஒரு வைரஸ் தொற்றான சிங்கிள்ஸ் என்பது ஒரு வலி மிகுந்த தடிப்பினை உண்டாக்கக் கூடியதோடு, மேலும் இது உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படக் கூடியதும் ஆகும்.
இது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
ஷிங்ரிக்ஸ் என்பது உலகின் முதல் உயிரற்ற, இனக் கலப்புத் துணைப் பிரிவு தடுப்பு மருந்தாகும் என்பதோடு, இது இரண்டு தவணைகளாக தசைகளுக்குள் உட்செலுத்தப் படுகிறது.