லடாக்கில் இராணுவப் பயிற்சியின் போது ஷியோக் நதியில் ஏற்பட்ட பலத்த நீர்ப் போக்கு காரணமாக பீரங்கி அடித்துச் செல்லப்பட்டதில் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
சியாச்சின் பனிப்பாறையின் ஒரு பகுதியான ரிமோ பனிப்பாறையிலிருந்து 550 கி.மீ நீளமுள்ள ஷியோக் நதி உருவாகிறது.
இது சிந்து நதியின் கிளை நதியாகும்.
இது ஜம்மு மற்றும் காஷ்மீரில் வடக்கு லடாக் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் நுழைந்து, அங்கு சிந்து நதியுடன் இணைகிறது.