மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது ‘ஷில்ப் சமகம் மேளா 2024’ என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியமானப் பாரம்பரிய கை வினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது ‘TULIP’ திட்டம் தொடங்கப்பட்டது.
‘TULIP' என்பது பாரம்பரியக் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான முன்னேற்றத் திட்டத்தைக் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பானது, விளிம்புநிலையில் உள்ள கைவினைஞர்களை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அவர்களின் தயாரிப்புகளை உலகளவில் வெளிப்படச் செய்தல் மற்றும் அவற்றின் விற்பனைக்கான இயங்கலைத் தளத்தினை அவர்களுக்கு வழங்குகிறது.