புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு வல்லுநர்கள் அடங்கிய சர்வதேசக் குழுவானது ஷீலாண்டியாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தினை உருவாக்கியுள்ளது.
இது பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் ‘உலகின் எட்டாவது கண்டமாக’ கருதப் படுகிறது.
1.89 மில்லியன் சதுர மைல்கள் (4.9 மில்லியன் சதுர கி.மீ.) கொண்ட ஒரு பரந்த கண்டமான ஷீலாண்டியா, மடகாஸ்கரை விட ஆறு மடங்கு பெரியதாகும்.
ஒரு சிறு கண்டமாக வகைப்படுத்தப்பட்டால், ஷீலாண்டியா உலகின் மிகப்பெரிய சிறு கண்டமாக இருக்கும்.
ஷீலாண்டியாவின் 94% பகுதி கடலுக்கு அடியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
மீதமுள்ள 6% நியூசிலாந்து மற்றும் சுற்றியுள்ள தீவுகளாகும்.
உலகின் மிகப்பெரியத் தீபகற்பமான அரேபியத் தீபகற்பம் (3,237,500 சதுர கிலோ மீட்டர் அல்லது 1,250,000 சதுர மைல்) மற்றும் இந்தியத் துணைக் கண்டம் (4,300,000 சதுர கிலோ மீட்டர் அல்லது 1,700,000 சதுர மைல்) ஆகியவற்றை விட ஷீலாண்டியா என்பது கணிசமான அளவில் பெரியது ஆகும்.