மத்திய அரசாங்கமானது நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்படும் INC-22 படிவங்களுக்கான விதிமுறைகளைத் தளர்த்தி அதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்பு உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடம், இயக்குநர்கள் மற்றும் வணிகத்திற்கான ஆதாரம் ஆகியவை தொடர்பான விவரங்களை அளிப்பதற்காக இந்த INC-22 படிவங்கள் தேவைப்படுகின்றது.
ஷெல் நிறுவனங்களை ஒழிப்பதன் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷெல் நிறுவனங்கள்
ஷெல் நிறுவனம் என்பது அலுவலகம் இல்லாமலும் பணியாளர்கள் இல்லாமலும் பெயரளவில் மட்டுமே செயல்படக்கூடிய ஒரு நிறுவனம் அல்லது அமைப்பாகும்.
ஆனால் அவை வங்கிக் கணக்கு கொண்டதாகவும் மந்தமான முதலீடுகளைக் கொண்டதாகவும் அறிவுசார் சொத்துரிமை அல்லது கப்பல் போன்ற சொத்துகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரைக் கொண்டதாகவும் இருக்கும்.
ஷெல் நிறுவனங்கள் நிதி மோசடிக்காகவும் நிதியைத் திசை திருப்பும் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பல அடுக்குகளைக் கொண்ட நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.