TNPSC Thervupettagam
April 22 , 2018 2311 days 730 0
  • தி வயர் (The Wire) இதழின் நிறுவன ஆசிரியரான (founding editor)  சித்தார்த் வரதராஜன் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டிற்கான ஷோரென்ஸ்டீன் இதழியல் விருது (Shorenstein Journalism)  அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University)  வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய சித்தார்த் வரதராஜனின் துணிகர குறிப்புகளுக்காக (courageous accounts)    அவருக்கு  ஷோரென்ஸ்டீன் இதழியல் விருது  வழங்கப்பட்டுள்ளது.

ஷோரென்ஸ்டீன் விருதைப் பற்றி

  • அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் வால்டர் ஷோரென்ஸ்டீன் ஆசியா – பசுபிக் ஆராய்ச்சி மையத்தால் (Walter H. Shorenstein Asia-Pacific Research Centre) ஷோரென்ஸ்டீன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
  • ஆசியாவின் மீது சிறந்த அறிக்கையை வெளியிட்ட மற்றும் ஆசிய பிராந்தியத்தினைப் பற்றிய மேற்கத்திய உலகின் புரிதலுக்கு கணிசமான பங்களிப்பு ஆற்றிய இதழியலாளர்களை கவுரவிப்பதற்காக இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஷோரென்ஸ்டீன் விருதினை இதற்கு முன் 15 இதழியலாளர்கள் பெற்றுள்ளனர்.
  • ஆரம்பத்தில் இவ்விருது தனித்துவமான புகழ்மிக்க அமெரிக்க இதழியலாளர்களை கவுரவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. பின் 2011-ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தனித்துவமான புகழ்மிக்க இதழியலாளர்களை  கவுரவிக்கும் வகையில்  இந்த விருதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்