ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறத்தில் வழங்கும் திட்டம்
March 25 , 2025 7 days 59 0
கிராமப்புறச் சமூக வாழ்க்கையைப் பாதுகாத்து, கிராமப்புற இந்தியாவில் நகர்ப்புற வசதிகளை அணுகுவதை நன்கு உறுதி செய்வதோடு, சுமார் 300 கிராமக் குழுக்களை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியினை இணைக்கும் ஒரு நோக்கம் கொண்ட இது 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கியது.
தேசிய அளவிலான இத்தரவரிசையில் 96.32 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு மாநிலம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து மிசோரம் (93.96), உத்தரப் பிரதேசம் (92.37), மற்றும் தெலுங்கானா (91.87) ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.