TNPSC Thervupettagam

ஷ்ரேஷ்டா திட்டம்

October 15 , 2023 280 days 424 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘முக்கிய இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்விக்கான திட்டம்’ (SHRESHTA) என்ற தனது புதிய திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட சாதிப்  பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெவ்வேறு முறைகளில் உயர்தரப் பள்ளிக் கல்வி வழங்கப்படும்.
  • கல்வித் துறையில் பட்டியலிடப்பட்ட சாதியினர் அதிகம் உள்ள பகுதிகளில் அரசு தனது மேம்பாட்டு முன்னெடுப்புகளை விரிவுபடுத்தவும் இது உதவும்.
  • உயர்தரக் கல்வியை வழங்கும் அரசு சாரா நிறுவனங்களால் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) நடத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல் படுத்தப் படும்.
  • இந்த முறையின் கீழ், திறமையான மாணவர்கள் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் மாநில வாரியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சேர்க்கைப் பெற வாய்ப்பு பெறுவார்கள்.
  • இந்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் SHRESHTA திட்டத்திற்கான தேசிய நுழைவுத் தேர்வின் (NETS) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்