TNPSC Thervupettagam

ஸாங்'இ-6 கலத்தின் நிலவு மண் மாதிரிகள்

September 27 , 2024 57 days 130 0
  • இந்த ஆண்டு,  நிலவின் புலப்படாத பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்த முதல் மற்றும் ஒரே நாடு சீனாவாகும்.
  • இது மோதலால் உருவான நிலவின் மிகப்பெரிய, ஆழமான மற்றும் பழமையான படுகையான தென் துருவ-எய்ட்கன் படுகையில் இருந்து 1.9 கிலோ (4.26 பவுண்டுகள்) நிலவு மாதிரிகளைச் சேகரித்தது.
  • நிலவின் புலப்படாத இந்தப் பகுதியானது பசால்ட் மற்றும் அயல் பகுதியிலிருந்து வெளியேறியப் பொருள்கள் ஆகியவற்றால் ஆனது என்றும் முன்னர் சேகரிக்கப்பட்ட நிலவு மாதிரிகளிலிருந்து வேறுபட்டு உள்ளது என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஸாங்'இ-5 கலமானது நிலவின் அருகாமைப் பகுதியில் சேகரித்த சில மாதிரிகளுடன் ஒப்பிடச் செய்கையில், இந்த மண் மாதிரிகளில் ஃபெல்ட்ஸ்பர் மற்றும் கண்ணாடி போன்ற அதிக வெளிர் நிறத் துகள்கள் உள்ளன.
  • நிலவின் தொலைதூரப் பகுதியானது பலவிதமான எரிமலை மற்றும் பல்வேறு மோதல் நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது என்பதோடு இது அந்தப் பகுதியின் வரலாற்றை நிலவின் மற்றப் பகுதிகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்